• Sun. Mar 29th, 2026

24×7 Live News

Apdin News

ஐபிஎல் 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ்

Byadmin

Mar 29, 2026


ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார் (கோப்புப் படம்)

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பந்துவீசும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை. அடுத்ததாக அவர்கள் பேட்டிங் செய்யும்போது அவர் இம்பேக்ட் வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன்கள் டாஸில் சொன்னது என்ன?

டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா, “ஆடுகளம் நன்றாகத் தெரிகிறது. வழக்கத்தை விட அதிக புற்களுடன் பசுமையாக இருப்பதால், அது எப்படி செயல்படுகிறது என்று பார்க்க விரும்புகிறோம். இது எங்களது கோட்டை, ஒட்டுமொத்த கூட்டமும் எங்களுக்கு ஆதரவளிக்க இங்கே கூடியுள்ளது. எனவே நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி அவர்களை மகிழ்விக்க விரும்புகிறோம். பும்ராவும் விளையாடப் போகிறார்.” என்று கூறினார். ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், மிட்செல் சான்ட்னர் என பல கேப்டன்கள் தனக்குத் துணையாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, “நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். வான்கடே மைதானத்தில் இந்த அளவிற்கு புற்களை நான் பார்த்ததே இல்லை. போட்டிக்கு நாங்கள் நன்றாக தயாராகியிருக்கிறோம். கொல்கத்தாவிலும் மும்பையிலும் சில பயிற்சி முகாம்கள் நடைபெற்றன. மும்பை இந்தியன்ஸ் ஒரு சாம்பியன் அணி என்று எங்களுக்குத் தெரியும், அவர்களுக்கு எதிராக விளையாடுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

By admin