• Sun. Mar 22nd, 2026

24×7 Live News

Apdin News

ஐபிஎல் 2026: முதல் போட்டி எங்கே? சென்னை ஆட்டங்கள் உள்பட போட்டி அட்டவணை, அணிகள் பற்றிய முழு விவரம்

Byadmin

Mar 22, 2026


ஐபிஎல் 2026: போட்டி நடக்கும் இடங்கள், அட்டவணை மற்றும் அணிகள் விவரம்

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP via Getty Images

படக்குறிப்பு, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2026 சீசனின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் 28-ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. ஆர்சிபி அணி நடப்பு சாம்பியன் என்பதால் அவர்களின் சொந்த மைதானத்தில் இந்த சீசனின் முதல் போட்டி நடக்கிறது. முதல் போட்டியில் அந்த அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இந்த புதிய சீசன் பற்றிய சில முக்கியமான கேள்விகளும் அதற்கான பதில்களும் இந்தப் பதிவில்…

ஐபிஎல் 2026 எந்தெந்த நகரங்களில் நடைபெறுகிறது?

10 அணிகள் விளையாடும் இந்த ஐபிஎல் தொடர் மொத்தம் 13 நகரங்களில் நடக்கிறது.

டெல்லி (டெல்லி கேபிட்டல்ஸ்), கொல்கத்தா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), லக்னௌ (லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்), சென்னை (சென்னை சூப்பர் கிங்ஸ்), ஆமதாபாத் (குஜராத் டைட்டன்ஸ்), ஹைதராபாத் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), மும்பை (மும்பை இந்தியன்ஸ்) ஆகிய 7 நகரங்களில் அந்தந்த அணிகளின் 7 ஹோம் ஆட்டங்களும் (லீக் சுற்று) நடைபெகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ப்பூர் (4 போட்டிகள்) மற்றும் கௌஹாத்தி (3 போட்டிகள்) என இரு இடங்களில் தங்கள் ஹோம் ஆட்டங்களை விளையாடுகிறது. நியூ சண்டிகர் (4 போட்டிகள்) மற்றும் தரம்சாலா (3 போட்டிகள்) ஆகிய ஊர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹோம் ஆட்டங்கள் நடைபெறும். தங்களின் 5 ஹோம் ஆட்டங்களை பெங்களூருவில் விளையாடும் ஆர்சிபி, 2 ஹோம் ஆட்டங்களை ராய்ப்பூரில் விளையாடுகிறது.

By admin