• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

ஐபிஎல் 2026: ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது சிஎஸ்கே

Byadmin

Apr 5, 2026


டாஸ் வென்ற ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்

பட மூலாதாரம், R.SATISH BABU/AFP via Getty Images

படக்குறிப்பு, டாஸ் வென்ற ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார் (கோப்புப் படம்)

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 11வது போட்டியில் சென்னை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

ஹோம் டீம் ஆர்சிபி தங்களின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தி சீசனைத் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் தாங்கள் விளையாடிய 2 போட்டிகளிலுமே தோற்று முதல் வெற்றியைத் தேடிக்கொண்டிருக்கிறது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆர்சிபி எந்த மாற்றங்களும் செய்யவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், கடந்த போட்டியில் ஆடாத ஜேமி ஓவர்டன் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார்.

டாஸில் என்ன நடந்தது?

பந்துவீச்சை தேர்வு செய்த ருதுராஜ் கெய்க்வாட், “நாங்கள் முதலில் பந்துவீசுகிறோம். இது அதிக ரன்கள் எடுக்கக்கூடிய மைதானம். ஆடுகளம் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. அவர்களை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கட்டுப்படுத்த முயற்சிப்போம். தோனி மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார், சில நேரங்களில் அதற்கு அவகாசம் தேவைப்படும், அவர் விளையாடத் தயாராக இருந்தால், அது விரைவில் நடக்கும். முதல் போட்டி ஏமாற்றமளித்தது, ஆனால் இரண்டாவது போட்டியில் எங்கள் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.” என்று கூறினார்.

By admin