• Thu. Feb 12th, 2026

24×7 Live News

Apdin News

ஐரோப்பாவில் காதல் மோசடிகள் அதிகரிப்பு; பெண்கள் அதிகம் பாதிப்பு

Byadmin

Feb 12, 2026


ஐரோப்பிய நாடுகளில் பெண்களை குறிவைத்து காதல் வலையில் சிக்க வைத்து பண மோசடி செய்வது அதிகரித்து வருவதாக நேஷன்வைடு பில்டிங் சொசைட்டி (Nationwide Building Society) தெரிவித்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு இடையில் இவ்வாறான மோசடி சம்பவங்கள் 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோசடிகளால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்கள் சராசரியாக £2,600 பவுண்ட்ஸ் வரை பணத்தை இழக்கின்றனர். ஆனால் பெண்கள் £4,100 பவுண்ட்ஸ் வரை இழப்பை சந்திப்பதாக கூறப்படுகிறது.

மேலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தனிமையில் வாழ்பவர்கள் இத்தகைய மோசடிகளின் முக்கிய இலக்காக மாறியுள்ளனர். சமூக உறவுகளின் பற்றாக்குறையை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் நம்பிக்கையை உருவாக்கி பின்னர் பணத்தை மோசடி செய்வதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Nationwide இன் பொருளாதார குற்றத் துறைத்தலைவரான ஜிம் வின்டர்ஸ், இந்த நிலைமை “கலப்பு காதல் முதலீட்டு மோசடி” எனப்படும் புதிய மோசடி முறையின் அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த வகை மோசடிகளில் காதல் உறவு போல நடித்து முதலீடு செய்ய தூண்டி பணத்தை அபகரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

The post ஐரோப்பாவில் காதல் மோசடிகள் அதிகரிப்பு; பெண்கள் அதிகம் பாதிப்பு appeared first on Vanakkam London.

By admin