0
ஐரோப்பாவில் வர்த்தகத்தை பெருக்க, சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலஞ்சம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெல்ஜிய ஊடகங்கள் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் Huawei ஊழல் தொடர்பில் சிலரை பெல்ஜியம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சுமார் 100 பொலிஸார் இது தொடர்பில் புலன் விசாரணை நடத்தினர். பிரசல்ஸிலும் போர்த்துக்கலிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
ஊழல், மோசடி, குற்றக்கும்பல் செயல்பாடு உள்ளிட்ட குற்றங்கள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
புலனாய்வில் ஒத்துழைக்க இருப்பதாக தெரிவித்த Huawei, குற்றச்சாட்டுகளைக் கடுமையாய் கருதுவதாகக் கூறியது.
Huawei குறித்து அக்கறை தெரிவித்த ஐரோப்பிய ஆணையப் பேச்சாளர், உறுப்பு நாடுகள் 5G கட்டமைப்பில் அந்நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.