0
ஐரோப்பிய நாடுகள் தற்காப்புக்கு அதிக செலவிட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் புதிய யுகத்தில் காலடி எடுத்துவைப்பதாகக் கூறிய அவர், தற்காப்புக்காக ஐரோப்பா அதிகச் செலவிட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
அதற்காக பிரான்ஸ் தனது அணுவாயுதத் தற்காப்பை ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் வழங்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்தி : பாதுகாப்பை பலப்படுத்த திட்டம் தீட்டும் ஐரோப்பிய ஒன்றியம்!
உக்ரேன் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அவசர உச்சநிலைக் கூட்டம் நடத்தவிருக்கும் நேரத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை மக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
உக்ரேனுக்கும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவின் தற்காப்பு ஆதரவு எந்த அளவுக்கு இருக்கும் என்பதில் கேள்வி எழுந்திருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பை உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமரும் வெள்ளை மாளிகையில் சந்திக்கும்போது, தாமும் அந்தச் சந்திப்பில் பங்குபெற விரும்புவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் மேலும் தெரிவித்தார்.