0
ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரத்தில் ஐரோப்பா பலவீனமாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான காரசாரமான தேர்தல் பிரசாரத்தின் மூலம் பதவியைக் கைப்பற்றிய டிரம்ப், புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான ஐரோப்பியக் கொள்கை ‘பேரிடர்’ என்றார்.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் சிதைந்துவிட்டதாகவும் அவர் குறை கூறியிருக்கிறார்.
Politico தளத்தில் வெளியான பேட்டியில் மேற்படி விடயங்களை டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரேன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் நடந்துகொள்ளும் விதத்தையும் டிரம்ப் சாடினார். “போரை நிறுத்துவது குறித்து ஐரோப்பிய நாடுகள் பேசுகின்றன. ஆனால், அதில் பிரயோசனமில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பியத் தலைவர்கள் அரசியல் நேர்மையைப் பின்பற்றி பலவீனம் அடைந்துவிட்டதாகவும் டிரம்ப் குறை கூறினார்.
டிரம்ப் இந்த கருத்துகளால் அமெரிக்காவுக்கும் அதன் நெடுங்கால நட்பு வட்டாரமான ஐரோப்பாவுக்கும் இடையே பிளவு மோசமாகின்றதாக அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.