• Sat. Oct 25th, 2025

24×7 Live News

Apdin News

ஐஸ்லாந்துக்கு முதல் முறையாக கொசு வந்தது ஏன்? எப்படி வந்தது?

Byadmin

Oct 25, 2025


 ஐஸ்லாந்து, கொசுக்கள், காலநிலை மாற்றம்

ஐஸ்லாந்தில் இந்த வசந்த காலத்தில் வரலாறு காணாத வெப்பம் ஏற்பட்ட பிறகு, அங்கு கொசுக்கள் வந்துவிட்டன. இதற்கு முன்னர் ஒருபோதும் ஐஸ்லாந்தில் கொசுக்கள் இருந்ததில்லை.

பூச்சி ஆர்வலரான பிஜோர்ன் ஹ்ஜால்டசன் கடந்த வாரம் பல இரவுகளில் விட்டில் பூச்சிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொசுக்கள் இருப்பதை அவர் கண்டறிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு பெண் கொசுக்களையும் ஒரு ஆண் கொசுவையும் அவர் பார்த்துள்ளார். அவை குலிசெட்டா அன்லுலாட்டா என வகையைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டன, இவை குளிர்காலத்தில் உயிர்வாழக்கூடிய கொசுவின் சில இனங்களில் ஒன்றாகும்.

இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னர், உலகின் கொசுக்கள் இல்லாத இரு இடங்களில் ஐஸ்லாந்தும் ஒன்றாக இருந்தது.



By admin