• Thu. Oct 31st, 2024

24×7 Live News

Apdin News

ஐ.சி.சி. ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய தலைவராக இலங்கையின் சுமத்தி தர்மவர்தன நியமனம்

Byadmin

Oct 31, 2024


சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய சுயாதீனத் தலைவராக இலங்கையைச் சேர்ந்த சுமத்தி தர்மவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று பிற்பகல் வெளியிட்டது.

இப் பதவியை 14 வருடங்களாக வகித்தவந்த சேர் ரொனி ஃப்லனகன் ஓய்வுபெற்றதை அடுத்து அப் பதவிக்கு தர்மவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் விளையாட்டுத்துறை அமைச்சு உட்பட அரசாங்கம் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றிய அனுபவசாலி தர்மவர்தன ஆவார். அவர் பல்வெறு சட்டத்துறை சார்ந்த விடயங்களிலும் பணியாற்றியுள்ளார்.

ஊக்கமருந்து மற்றும் குற்றவியல் தடுப்பு, விளையாட்டுத்துறை ஊழல் தொடர்பான விசாரணை, விளையாட்டுத்துறை விதிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் விசாரணைகள்  மற்றும்   வழக்குகளை மேற்பார்வை செய்தல் ஆகிய விடயங்களில் இன்டர்போலுடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் புதிய ஊழல் தடுப்புப் பிரிவு தலைவர் தர்மவர்தன இணைந்து செயற்பட்டுள்ளார்.

இலங்கையில் விளையாட்டத்துறை விதிகளை ஒழுங்குபடுத்தியவர் என்ற பெருமையும் தர்மவர்தனவையே சாருகிறது.

நிறைவேற்று அதிகார மட்டத்தில் நேர்மைத்துவப் பிரிவு பொது முகாமையாளரால் நிருவகிக்கப்படும் ஊழல் தடுப்பு பிரிவை மேற்பார்வை செய்வதும் வழிநடத்துவதும் புதிய ஊழல் தடுப்புப் பிரிவின் சுயாதீனத் தலைவரின் பொறுப்பாகும்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் சுயாதீன தலைவராக 2024 நவம்பர் முதலாம் திகதியிலிருந்து சுமத்தி தர்மவர்தன செயற்படவுள்ளார்.

By admin