• Sat. Mar 28th, 2026

24×7 Live News

Apdin News

ஐ.நா. இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் சந்திப்பு

Byadmin

Mar 28, 2026


ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc Andre Franche மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினருக்கு இடையே வெள்ளிக்கிழமை (27) கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Marc Andre Franche மற்றும் அவரது குழுவினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜை சந்தித்து யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் மனித உரிமைகள் உத்தியோகத்தர் சேவியர் குமுதினியும் கலந்துகொண்டார்.

By admin