• Wed. Oct 30th, 2024

24×7 Live News

Apdin News

ஐ.நா-வின் UNRWA அமைப்பிற்கு இஸ்ரேலில் தடையா? அமெரிக்கா, பிரிட்டன் சொல்வது என்ன?

Byadmin

Oct 30, 2024


மத்திய கிழக்கு, இஸ்ரேல் - பாலத்தீன், ஐக்கிய நாடுகள் சபை, UNRWA

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலின் இந்த முடிவு காஸாவில் மனிதாபிமானச் சிக்கலை மோசமாக்கும் என்று பார்க்கப்படுகிறது (காஸாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் – கோப்புப் படம்)

பாலத்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East – UNRWA) இஸ்ரேலில், செயல்படத் தடைவிதிக்கும் மசோதாவை நிறைவேற்றி இஸ்ரேல் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.

இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டால், UNRWA மூன்று மாதங்களுக்குள் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருக்கும் கிழக்கு ஜெருசலேமில் அதன் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பாலத்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை பாலத்தீன அகதிகளுக்காகச் செயல்படுகிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், UNRWA ஊழியர்கள் இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்பை இழக்க நேரிடும்.

இதனால், காஸா மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறையக்கூடும்.

By admin