• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

ஒகேனக்கல் காவிரியில் ஒகேனக்கல் நீர்வரத்து 1,200 கனஅடியாக சரிவு | Hogenakkal water flow drops to 1200 cubic feet

Byadmin

Feb 23, 2025


தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாகக் குறைந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 20-ம் தேதி காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக பதிவானது. 21-ம் தேதி காலையில் விநாடிக்கு 1,500 கனஅடியாக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 1,200 கனஅடியாகக் குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 491 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 641 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 491 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 109.93 அடியாகவும், நீர் இருப்பு 78.30 டிஎம்சியாகவும் இருந்தது.



By admin