• Thu. May 15th, 2025

24×7 Live News

Apdin News

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,000 கனஅடியாக அதிகரிப்பு | water flow in hogenakkal cauvery rises

Byadmin

May 15, 2025


தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 11-ம் தேதி விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து 12-ம் தேதி காலை 1,200 கனஅடியாகவும், 13-ம் தேதி காலை 700 கனஅடியாகவும் குறைந்தது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 714 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 390 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 108.06 அடியாகவும், நீர்இருப்பு 75.68 டிஎம்சியாகவும் இருந்தது.



By admin