• Fri. Sep 26th, 2025

24×7 Live News

Apdin News

ஒக்டோபரில் வெளியாகும் நடிகர் ரஞ்சித்தின் ‘இறுதி முயற்சி ‘

Byadmin

Sep 25, 2025


நடிகரும், அரசியல்வாதியுமான ரஞ்சித் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘இறுதி முயற்சி’ எனும் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ எனும் திரைப்படத்தில் ரஞ்சித், மேகாலி, விட்டல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சூரியகாந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வைரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதியன்று வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே பிக் பொஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றியதன் மூலம் டிஜிட்டல் திரை ரசிகர்களிடமும் பிரபலமான நடிகர் ரஞ்சித் நடிப்பில் கடந்தாண்டு ‘கவுண்டம்பாளையம்’ எனும் திரைப்படம் வெளியாகி, வணிக ரீதியாக ஓரளவு லாபத்தை வழங்கியது என்பதும், அதனால் ரஞ்சித் நடித்திருக்கும் ‘இறுதி முயற்சி’ திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே குறைந்தபட்ச ஆதரவு எழுந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post ஒக்டோபரில் வெளியாகும் நடிகர் ரஞ்சித்தின் ‘இறுதி முயற்சி ‘ appeared first on Vanakkam London.

By admin