• Mon. Feb 9th, 2026

24×7 Live News

Apdin News

ஒன்றாக தேர்தலைச் சந்தித்தபோதும் பாமக உடன் கூட்டணியில் சேர விசிக மறுப்பது ஏன்?

Byadmin

Feb 9, 2026


ராமதாஸ், திருமாவளவன், பாமக, விசிக

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தேர்தல் நிலைப்பாட்டை தற்போது வரை அறிவிக்கவில்லை.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இருவரும் தனித்துச் சென்றனர். அதிமுக – பாஜக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்துவிட்டார்.

இந்தச் சூழலில் திமுக தலைமையிலான கூட்டணியில் ராமதாஸ் இணைவது தொடர்பான கருத்துக்களும் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், திமுக ஆட்சியை பாராட்டி கருத்து தெரிவித்ததும் இந்த யூகங்களுக்கு வலு சேர்த்தது.

திருமாவளவனும் நீங்களும் ஒரே கூட்டணியில் பயணிப்பீர்களா என்கிற கேள்விக்குப் பதிலளித்த ராமதாஸ், “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்,” எனத் தெரிவித்திருந்தார்.

By admin