• Tue. Nov 26th, 2024

24×7 Live News

Apdin News

ஒராஷ்னிக் ஏவுகணை: ரஷ்யா முதல் முறையாக யுக்ரேன் மீது ஏவிய இந்த ஏவுகணையின் ரகசியம் என்ன?

Byadmin

Nov 26, 2024


ரஷ்யா யுக்ரேன் போர், Oreshnik ஏவுகணை

பட மூலாதாரம், Reuters, Tass, BBC

நவம்பர் 21-ஆம் தேதி அன்று அதிகாலை யுக்ரேன் நகரமான டினிப்ரோவை ரஷ்யா தாக்கியது. ஆரம்பத்தில், இந்த தாக்குதலில் ரஷ்யா பயன்படுத்திய ஆயுதம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அது எந்த வகையான ஏவுகணை என்பது கூட தெரியவில்லை.

பிபிசி ரஷ்ய சேவையின் ராணுவ விவகாரங்கள் தொடர்பான செய்தியாளர் பாவெல் அக்செனோவ் இந்த ஏவுகணையை பற்றிய ஆதாரங்களையும், இதனை பயன்படுத்த முடிவு செய்ததன் மூலம் யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு புதின் என்ன சமிக்ஞையை அனுப்ப முயற்சிக்கிறார் என்பதையும் பற்றி ஆய்வு செய்தார்.

யுக்ரேனில் கிழக்கு பகுதியில் உள்ள நகரமான டினிப்ரோவின் மீது ஒரு புதிய நடுத்தர வகை ஏவுகணையான ஒராஷ்னிக்கை பயன்படுத்தியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.

யுக்ரேன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது கேடர் ஏவுகணை என்று அந்நாடு கூறி வருகிறது. இந்த ஆயுதம் என்னவாக இருக்கும் என்பதை அறிய சாத்தியகூறுகள் குறைவாகவே உள்ளன.

By admin