• Fri. Mar 20th, 2026

24×7 Live News

Apdin News

‘ஒரே ஏவுகணையில் 20 – 80 குண்டுகள்’ – இந்த ஆயுதம் மூலம் இஸ்ரேலை இரான் தாக்குவது ஏன்?

Byadmin

Mar 20, 2026


கிளஸ்டர் குண்டு தாக்கியபோது அந்தப் பகுதியிலிருந்த பெரும்பாலான மக்கள் தங்கள் பாதுகாப்பு அறைகளில் தஞ்சம் புகுந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிளஸ்டர் குண்டு தாக்கியபோது அந்தப் பகுதியிலிருந்த பெரும்பாலான மக்கள் தங்கள் பாதுகாப்பு அறைகளில் தஞ்சம் புகுந்தனர்

மத்திய இஸ்ரேலில் உள்ள ஒரு வயதான தம்பதியினரின் குடியிருப்பின் கூரை வழியாக இரானிய கிளஸ்டர் குண்டு உள்ளே புகுந்து, அவர்களின் சிறிய வரவேற்பறையில் வெடித்து சிதறியபோது நள்ளிரவு நேரமாக இருந்தது. இதில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.

குண்டு வந்த பாதை, சாம்பல் படிந்த இடிபாடுகளுக்கு மத்தியில் இன்னும் தெளிவாகத் தெரிந்தது.

அவர்கள் வசித்த மேல் தள குடியிருப்பின் கூரையில் இருந்த ஒரு பெரிய துளை, குண்டு எப்படி கான்கிரீட் மற்றும் உலோகக் கம்பிகளை உள்நோக்கித் தள்ளிக்கொண்டு நுழைந்தது என்பதைக் காட்டியது.

பின்புறச் சுவர்கள் முழுவதும் இருந்த சிதறல் துளைகள் வெடிப்பின் வலிமையைக் காட்டின. இது குடியிருப்பின் முன்பகுதியை அழித்து திறந்த நிலையில் விட்டுச் சென்றது.

இரவில் கிளஸ்டர் குண்டு தாக்கிய இடிபாடுகளை மீட்புப் பணியாளர்கள் சோதனை செய்வதைக் காண முடிந்தது.

பட மூலாதாரம், Getty Images

“நாங்கள் மூன்று இரைச்சலான இடைமறிப்புகளைக் கேட்டோம், ஆனால் நான்காவது முறை கேட்டபோது, அது எங்கள் வீடு என்று எங்களுக்குத் தெரிந்தது,” என்று பக்கத்து வீட்டில் வசிக்கும் சிகல் அமீர் கூறினார்.

By admin