• Mon. Jun 22nd, 2026

24×7 Live News

Apdin News

ஒரே விந்து கொடையாளருக்குப் பிறந்த பிள்ளைகள் பிற்காலத்தில் சந்தித்துக் கொண்டது எப்படி?

Byadmin

Jun 22, 2026


தாங்கள் சகோதரிகள் என அறிந்த பிறகு தங்களைப் பிரிக்க முடியாது என நடாஷா, ஜெம்மா மற்றும் ஹெலன் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Sperm Sisters

படக்குறிப்பு, தாங்கள் சகோதரிகள் என அறிந்த பிறகு தங்களைப் பிரிக்க முடியாது என நடாஷா, ஜெம்மா மற்றும் ஹெலன் தெரிவிக்கின்றனர்.

    • எழுதியவர், ஜெம்மா டுன்ஸ்டன்
    • பதவி, பிபிசி வேல்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நடாஷா, ஜெம்மா மற்றும் ஹெலன் ஆகிய மூன்று பெண்களும் தங்களின் தந்தை யார் என்பதைத் தெரிந்தே தாங்கள் வளர்ந்ததாக நம்பியிருந்தனர்.

ஆனால் பல ஆண்டுகள் கழித்து, டிஎன்ஏ பரிசோதனைகள் எடுத்த பிறகு தான் அவர்கள் மூவரும் ஒரே விந்து கொடையாளர் மூலம் பிரசவிக்கப்பட்டது தெரியவந்தது.

1991-ஆம் ஆண்டு விதிமுறைகள் அறிமுகப்படுவதற்கு முன்பாக பிறந்ததால் தாங்கள், விந்து கொடை ஒழுங்குபடுத்தப்படாத காலகட்டத்தில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் தங்களை “ஸ்பெர்ம் சிஸ்டர்ஸ்” என்று அழைத்துக் கொள்கின்றனர். தங்களின் புதிய உறவை கூட்டாக அனுபவித்து வரும் அவர்கள் முதல் சந்திப்பை “ஒரு தேவதைக் கதைப் போல இருந்தது. ஆனந்த கண்ணீர் வந்தது.” என்று குறிப்பிடுகின்றனர்.

ஹெலன் மற்றும் ஜெம்மா இருவரும் 30 வயது நெருங்கிறபோது தான் தாங்கள் கருவுற்றதன் பின் உள்ள உண்மைகளை அறிந்துகொண்டனர்.

பட மூலாதாரம், Gemma Hicks

படக்குறிப்பு, ஹெலன் மற்றும் ஜெம்மா இருவரும் 30 வயது நெருங்கியபோது தான் தாங்கள் கருவுற்றதன் பின் உள்ள உண்மைகளை அறிந்துகொண்டனர்.

ஜெம்மாவும் ஹெலெனும் பெர்க்‌ஷயரில் ஒன்றாக வளர்ந்தனர். அவர்களை வளர்த்த தந்தை தான் தங்களின் உயிரியல் தந்தை என அவர்கள் நினைத்திருந்தனர்.

By admin