• Tue. Feb 24th, 2026

24×7 Live News

Apdin News

ஓசூரில் அரசு ஊழியர் ‘காரை ஏற்றி கொலை’ – திமுக நிர்வாகி மகன் கைது குறித்து காவல்துறையின் விளக்கம்

Byadmin

Feb 24, 2026


திமுக, ஓசூர்

பட மூலாதாரம், TN Police

படக்குறிப்பு, திமுக நிர்வாகியின் மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஓசூரில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை எடுப்பது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் அரசு ஊழியர் ஒருவர் மீது காரை ஏற்றிக் கொலை செய்ததாக குற்றம் சாட்டி கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகியின் மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மூவர் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் திமுக மீது எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை அழிக்க முயற்சி நடப்பதாகவும் அரசியல் தலைவர்களால் புகார்கள் கூறப்பட்டன.

ஆனால் சிசிடிவி காட்சிகள் அனைத்தும் நீதிமன்றத்தில் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்று ஓசூர் காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

‘திமுக நிர்வாகியின் மகன் என்பதற்காக அவர்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை’ என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பிபிசியிடம் கூறினார்.

வீட்டுக்கு முன்பாக நிறுத்தியிருந்த டூ வீலரை எடுப்பதில் மோதல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிலாளர் நலத்துறையில் உதவி தொழிலாளர் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சிவமூர்த்தி. இவருடைய வீடு, ஓசூர் ராயக்கோட்டை அன்னை அரவிந்த் நகரில் உள்ளது.

By admin