• Tue. Aug 5th, 2025

24×7 Live News

Apdin News

ஓ.பன்னீர்செல்வத்தால் தமிழக சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் தாக்கம் செலுத்த முடியும்?

Byadmin

Aug 5, 2025


ஓ. பன்னீர்செல்வம் வெளியேறியது யாருக்கு பாதகம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியிருக்கும் நிலையில், ஒருபுறம் அவருக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கும் இடையிலான வார்த்தைப் போர் வலுத்துவருகிறது.

ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியிருக்கும் நிலையில், ஒருபுறம் அவருக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கும் இடையிலான வார்த்தைப் போர் வலுத்துவருகிறது.

மற்றொரு பக்கம், அவர் கூட்டணி தொடர்பாக என்ன முடிவுகளை எடுக்கப் போகிறார், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் யார் வாய்ப்புகளைப் பாதிப்பார் என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. அவருடைய திட்டம் என்ன? யாருடைய வாய்ப்புகளை அவர் பாதிப்பார்?

தே.மு.கூட்டணியில் இருந்து விலகல், ஸ்டாலினுடன் சந்திப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனக்கு போதிய மரியாதை இல்லாததாகக் கருதிய ஓ. பன்னீர்செல்வம் கடந்த வாரம் அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஜூலை மாத இறுதியில் தமிழ்நாட்டிற்குப் பிரதமர் வந்த போது, தான் அவரை வாழ்த்தவும் வழியனுப்பவும் அனுமதி கோரி கடிதம் எழுதியும் அவ்வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்தார். இதற்குப் பிறகு காட்சிகள் வேகமாக நகர ஆரம்பித்தன.

By admin