0
கஜகஸ்தானில் 67 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் பலர் உயிர் தப்பியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்ததாக கசாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் ரஷ்யாவில் உள்ள க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்த நிலையில், பனிமூட்டம் காரணமாக அது திருப்பி விடப்பட்டது என்று விமான நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
அத்துடன், விசாரணை முடியும் வரை விபத்துக்கான காரணம் குறித்து “கருதுகோள்களை முன்வைக்கமாட்டோம்” என்று விமான நிறுவனர் வியாழக்கிழமை கூறியுள்ளது.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் J2-8243 கசாக் நகரின் அக்டாவ் அருகே அவசரமாக தரையிறங்க முயன்றபோது புதன்கிழமை தீப்பிடித்தது.