16
தமிழீழ தாயகத்தின் வரலாற்றினை சந்ததியினருக்குக் கடத்தும் உன்னத நோக்கில், ‘கடலின் மடியில்’ குழுமத்தின் உருவாக்கத்தில் உருவான நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழா (01.03.2026) அன்று பிரித்தானியாவில்
தாயகத்தின் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய அணியாக செயற்பட்ட ஒரு அணியின் வரலாறு பற்றிப் பேசும் நூல் பிரித்தானியாவின் Alperton Community School இல் வரலாற்றில் தடம் பதித்த நினைவுகளைச் சுமந்து வந்த எஸ்.கே எழுதிய’கடலில் கரைந்துவிட்ட காலங்களும் வரலாற்றில் தடம் பதித்துவிட்ட நினைவுகளும்’ பாகம் 1 நூல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக லண்டனில் நடைபெற்று முடிந்தது. தமிழீழத் தேசியத் தலைவரின் ஆசியுடனும், போராட்ட வரலாற்றின் ஆழமான நினைவுகளுடனும் அமைந்த இந்நிகழ்வில் பிரித்தானிய வாழ் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திரைகடலோடித் திரவியம் தேடியது ஒரு காலம், திரைகடலோடி பொருள் பல கொணர்ந்து மண்ணுக்குத்தந்த நம் மறவர்களின் கால வரலாற்றையும் தமிழீழ போர்க்களங்களிற்கு, வேண்டிய பொருட்களையெல்லாம் கடல்தாண்டிக் கொண்டுவந்து கரைசேர்த்து, கரைசேராமலே போய்விட்ட எம் வீரமறவர்களின் வரலாறு தாங்கிய இந்த வரலாற்றுப் பொக்கிஷத்தை ஆவணப்படுத்தியுள்ளாளார்கள் கடலின் மடியில்’ குழுமத்தினர்
இந்நூல் உலகின் பல நாடுகளில் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ள தமிழிழ கடல்சார் அனுபவங்களையும், வரலாற்றுச் சம்பவங்களையும், மறக்க முடியாத நினைவுகளையும் பதிவு செய்யும் இந்த நூல், அவுஸ்ரேலியா சிட்னி Wentworthville Community Centre, மலேசியா – கோலாலம்பூர் Lavender Hall, ஜெர்மனி – டோர்ட்முண்ட் Zur Vielfalt 21, கனடா – ஸ்கார்பரோவில் உள்ள மல்வர்ன் குடும்ப வள மையம் (Malvern Family Resource Centre), ஐக்கிய இராச்சியம் – லண்டன் Alperton Community School, சுவிட்சர்லாந்து – சூரிக்
Schwerzishall இலும் சிறப்பாக ஒரே நாளில் வெளியீட்டு செய்யப்பட்டுள்ளது.
உலகத் தமிழர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இந்த வெளியீட்டினை சிறப்பித்துள்ளனர். கடல் மடியில் கரைந்த நினைவுகள் வரலாற்றின் பக்கங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
