கடலூரில் 9 உயிர்களை பறித்த கோர விபத்து நடந்தது எப்படி? காணொளி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எழுத்தூர் என்ற இடத்தில் புதன்கிழமையன்று கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
நேற்றிரவு 7.30 மணியளவில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் டயர் வெடித்ததில், எதிர்திசையில் வந்த 2 கார்கள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த விபத்தில் காயம் அடைந்த மேலும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்துத்துறை மற்றும் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு