• Fri. Sep 19th, 2025

24×7 Live News

Apdin News

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை: துறைமுக மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் வேலு வலியுறுத்தல் | It is our duty to promote maritime trade says EV Velu

Byadmin

Sep 19, 2025


சென்னை: தமிழகத்​தில் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தார இலக்கை எட்ட‘நீலப் பொருளா​தா​ரம்’ அதாவது கடல்​வழி வணி​கத்தை மேலும் ஊக்​குவிக்க வேண்​டியது நம் கடமை என்று துறை​முக மேம்​பாட்​டாளர்​களிடம் அமைச்​சர் எ.வ.வேலு வலி​யுறுத்​தி​னார்.

சென்னை தி.நகரில் நீலப் பொருளா​தார மாநாடு நடை​பெற்​றது. இம்​மா​நாட்டை பொதுப்​பணி​கள், நெடுஞ்​சாலைகள் மற்​றும் சிறு துறை​முகங்​கள் துறை அமைச்​சர் எ.வ.வேலு தொடங்கி வைத்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தின் கடற்​கரை பன்​னாட்​டுக் கப்​பல்​கள் செல்​லும் வழித்​தடத்​துக்கு மிக அரு​காமை​யில் உள்ள பகு​தி​யாகும். 14 கடலோர மாவட்​டங்​கள் கொண்ட தமிழகத்​தின் கடற்​கரைப் பகு​தியை பல்​வேறு தரப்​பினரும் பயன்​படுத்​துகின்​றனர். குறிப்​பாக கடற்​கரை பகு​தி​யிலேயே குடி​யிருந்து மீன்​பிடித்தொழில் செய்து வரும் மீனவர்​கள் வசிக்​கின்​றனர். இதுத​விரமீன்​பிடி துறை​முகங்​கள், மீன்​வளர்ப்​புப் பண்​ணை​கள், வணிக ரீதி​யாக மத்​திய மற்​றும் மாநில அரசின் கட்​டுப்​பாட்​டில் உள்ள துறை​முகங்​கள், பொழுது​போக்கு கடற்​கரைப் பகு​தி​கள் (Beaches), உள்ளன.

மேலும் சுற்​றுச்​சூழல் பாது​காப்பு பகு​தி​களான அலையாத்தி காடு​கள், ஆமை​கள் முட்​டை​யிடும் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா பவளப்பாறை​கள் நிறைந்த பகு​தி​கள்,பறவை​கள் சரணால​யங்​கள், வரலாற்று முக்​கி​யத்​து​வம் வாய்ந்த வழி​பாட்​டுத் தலங்​கள், கடலோர தொழில் பூங்​காக்​கள், கலங்​கரை விளக்​கங்​கள் தமிழக கடற்​பகு​தி​களில் அமைந்​துள்​ளன.

உலகள​வில் 80 சதவீத வணி​க​மும், மிக நீண்ட 11 ஆயிரம் கிலோ மீட்​டர் நீள கடற்​கரை பகு​தி​யைக் கொண்ட நம் நாட்​டில் சுமார் 95 சதவீத வணி​க​மும் கடல்​வழி​யாக நடை​பெறுகிறது. தமிழகத்​தில் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தார இலக்கை எட்ட கடல்​வழி வணி​கத்தை மேலும் ஊக்​குவிக்க வேண்​டியது நம் கடமை. அதற்கு வணி​கத் துறை​முகங்​கள், மீன்​பிடித் துறை​முகங்​கள், கடல்​சார் சுற்​றுலா மேம்​பாடு, கப்​பல் கட்​டு​தல் மற்​றும் பழுது​பார்த்​தல் ஆகிய துறை​களில் நாம் மேலும் முன்​னேற்​றமடைய திட்​டங்​களை வகுக்க வேண்​டும். கடல் மார்க்​க​மாக கப்​பல்​கள் மூலம் கொண்டு செல்​லும் சரக்கு போக்​கு​வரத்து செல​வு, சாலை மற்​றும் ரயில் மூல​மாக கொண்டு செல்ல ஆகும் செலவை விட மிகக் குறை​வான​தாகும்.

சென்னை – கன்னி​யாகுமரி சாலை​யும், கிழக்கு கடற்​கரைச் சாலை​யும் நம் கடலோர வணி​கத் துறை​முகங்​கள் மற்​றும் மீன்​பிடி துறை​முகங்​களுக்கு எளி​தான சாலை இணைப்பை வழங்​கு​கின்​றன. தமிழக கடற்​கரை பகு​தி​களுக்கு ரயில் இணைப்​பும் போதிய அளவில் உள்​ளது. இதை துறை​முக மேம்​பாட்​டாளர்​கள் கருத்​தில் கொண்டு துறை​முகங்​களை அமைக்​க​வும், தொழில் தொடங்​க​வும் முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். மாநாட்​டில், சென்னை மற்​றும் காம​ராஜர் துறை​முக ஆணை​யத்​தின் தலை​வர் சுனில் பாலி​வால், நெடுஞ்​சாலைத் துறை செயலர் இரா.செல்​வ​ராஜ், தமிழ்​நாடு கடல்​சார் வாரிய தலைமை செயல் அலு​வலர் தி.ந.வெங்​கடேஷ் உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர்​.



By admin