• Thu. Aug 14th, 2025

24×7 Live News

Apdin News

கடல் அலையில் மின்சாரம் – வணிக ரீதி வெற்றிக்கு 2 பெரிய தடைகள் என்ன?

Byadmin

Aug 13, 2025


கடலின் கர்ஜனையின் கீழ், இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படாத ஒரு சக்தி இருக்கிறது. அது சுத்தமான (மாசு இல்லாத) ஆற்றலின் எதிர்காலத்தை மாற்றும் திறன் கொண்டது.

பட மூலாதாரம், Eric Yang/Getty Images

நீங்கள் எப்போதாவது கடல் அலையால் தாக்கப்பட்டிருந்தால், அதில் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள்.

கர்ஜிக்கும் கடலின் கீழ், இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படாத ஒரு சக்தி இருக்கிறது. அது சுத்தமான (மாசு இல்லாத) ஆற்றலின் எதிர்காலத்தை மாற்றும் திறன் கொண்டது.

ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக கடல் அலைகளில் இருந்து கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்த முயற்சித்து வருகிறார்கள். ஆனால் கடலின் கடுமையான சூழலும், அதற்கு ஆகும் அதிக செலவுகளும் அதனைச் செயல்படுத்தத் தடையாக உள்ளன.

இப்போது பல நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை தேடுகின்றன. இதன் மூலம், புதைபடிவ எரிபொருட்களைக் (பெட்ரோல், டீசல் போன்றவை) குறைக்கவும், காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும் முயற்சி செய்கின்றன.

By admin