• Mon. Mar 23rd, 2026

24×7 Live News

Apdin News

கடும் வெயில்..! கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Byadmin

Mar 23, 2026


கேரளம் மாநிலத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.

இது நாளுக்குநாள் அதிகரிக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், காசர்கோடு, திருவனந்தபுரம், பத்தினம் திட்டா, ஆலப்புழா, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

By admin