9
கட்டணம் செலுத்தி விளையாடக்கூடிய இணைய விளையாட்டுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றம் அதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
பிரபலமான இணைய விளையாட்டுத்துறை இதனால் பாதிக்கப்படும், நிதி ரீதியாக ஆபத்துகள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இந்தத் தடையால் இணைய விளையாட்டுத் துறை அதிர்ச்சியடைந்திருப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறினர்.
வேலையிழப்பு அதிகமாக இருக்கும் என்ற கவலையும் நிலவுகிறது.
அதேவேளை, சமூகத் தீங்குக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.