• Fri. Aug 22nd, 2025

24×7 Live News

Apdin News

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்பவர்களுக்கு மட்டுப்பாடு

Byadmin

Aug 19, 2025


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வழியனுப்ப செல்பவர்கள் உட்பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான காலப்பகுதியினுள், பயணிகளை வழியனுப்புவதற்காக அவர்களுடன் செல்பவர்கள், விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin