• Wed. Feb 18th, 2026

24×7 Live News

Apdin News

“கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை” – பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்

Byadmin

Feb 18, 2026


இலங்கை, பிரிட்டன், புதிய விசா விதிகள்

“நாங்கள் இங்கே வந்தபோது 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தோம். ஆனால் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற 10 முதல் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றால் குழந்தை பெற வேண்டும் என்கிற எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்,” என்கிறார் தற்போது பிரிட்டனில் வசித்து வரும் மகேஷ் கெலும்.

பிரிட்டனின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இதனால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி பிபிசி சிங்கள மொழி சேவையிடம் அவர் விளக்கினார்.

தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதி (ILR) பெறுவதற்கான குறைந்தபட்ச கால அளவை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என பிரிட்டன் உள்துறை செயலர் முன்மொழிந்துள்ளார். இந்த முடிவு பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ள சுமார் 26 லட்சம் பேர் இந்தப் புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். ஆனால் இந்த விதிகள் ஏற்கெனவே நிரந்தர வேலைவாய்ப்பு உரிமம் பெற்றவர்களுக்குப் பொருந்தாது.

காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதியின் (ஐ.எல்.ஆர்) கீழ் ஒருவர் பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கலாம், கட்டுப்பாடுகளின்றி வேலை செய்யலாம், பொது சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பிரிட்டன் குடியுரிமை பெறுவதற்கும் இது முக்கியமான படி.

By admin