• Mon. Mar 31st, 2025

24×7 Live News

Apdin News

‘கணவரின் நிறத்துடன் ஒப்பிட்டனர்’ – கேரள பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வேதனைப்பட்டது ஏன்?

Byadmin

Mar 28, 2025


கேரளா, சாரதா முரளிதரன், முக்கிய செய்திகள், நிற அரசியல்

பட மூலாதாரம், Sarada Muraleedharan/facebook

‘கறுப்பு என்பது வெறும் நிறம் மட்டுமல்ல, அது கெட்ட விஷயங்களையும் துக்கத்தையும் குறிக்கிறது. கறுப்பு என்பது மிக அழகான நிறம். அதை ஏன் இவ்வளவு மோசமாகப் பார்க்க வேண்டும்?’ எனக் கேள்வி எழுப்புகிறார், கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன்.

தனது கணவரின் வெள்ளை நிறத்தையும் தனது கறுப்பு நிறத்தையும் ஒப்பிட்டுக் கூறப்பட்ட விமர்சனங்களால் தாம் சோர்வடைந்ததாக முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

யார் இந்த சாரதா முரளிதரன்? நிறப் பாகுபாடுகளை எதிர்கொள்வது குறித்து அவர் கூறியது என்ன?

கேரள மாநில தலைமைச் செயலாளர் கூறியது என்ன?

கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் சாரதா முரளிதரன், செவ்வாய்க் கிழமையன்று (மார்ச் 25) தனது முகநூல் பக்கத்தில் நிறப் பாகுபாடுகளை எதிர்கொண்டது தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

By admin