• Fri. Dec 20th, 2024

24×7 Live News

Apdin News

கண்காட்சி கூட்ட நெரிசலில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

Byadmin

Dec 20, 2024


நைஜீரியாவின் இபாடானில் உள்ள பாடசாலையொன்றின் கண்காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 மாணவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாடசாலையில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்ற நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆண்டு நிறைவையொட்டி நேற்று முன் தினம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க மாணவ, மாணவியரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். நிகழ்ச்சியின்போது பரிசு பொருட்களும் கொடுக்க ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது.

இதனால், நிகழ்ச்சியை காணவும், பரிசு பொருட்களை வாங்கவும் கூட்டம் குவிந்ததுடன், எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது . இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாநில குற்றப் புலனாய்வு துறையின் குற்றப் பிரிவு விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் ஓயோ மாநில பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அடேவாலே ஒசிபெசோ தெரிவித்தார்.

By admin