• Tue. Dec 23rd, 2025

24×7 Live News

Apdin News

கதையின் நாயகனாக தமிழில் அறிமுகமாகும் நடிகர் ஆதி சாய்குமார்

Byadmin

Dec 23, 2025


விஜய் நடிப்பில் வெளியான ‘ஆதி’-  தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’- ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘டீசல்’- ஆகிய படங்களில் நடித்த தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான சாய்குமாரின் மகனான நடிகர் ஆதி சாய்குமார் தமிழில் பெயரிடப்படாத திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் குரு சரவணன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சதீஷ் மற்றும் ஆதி சாய் குமார் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரஹாம்சா ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார் எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்றும், 2026 ஆம் ஆண்டில் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

By admin