1
தமிழ்த் திரையுலகில் வில்லன் – நகைச்சுவை – குணச்சித்திரம் என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பல தலைமுறைகளை கடந்து தொடர்ச்சியாக பெற்று வரும் நட்சத்திரங்களான ரவி மரியா – ராதா ரவி ஆகிய இருவரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடித்து வருகிறார்கள்.
இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, நிழல்கள் ரவி, கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு , நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்தை துர்காஸ் தொகுக்கிறார் .
நகைச்சுவை பின்னணியில் நையாண்டி அரசியலாக தயாராகும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் – இயக்குநர்- நடிகர் ராம்தேவ் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ராதா ரவி- ரவி மரியா ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக இணைந்து திரையில் தோன்றி, தற்கால அரசியலை நகைச்சுவையான பின்னணியில் அலசுகிறார்கள். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் ” என்றார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரம் தொடங்குகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.