• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

கத்தாரிடம் மன்னிப்பு – நெதன்யாகுவின் தொனி மாறியது எதனால்?

Byadmin

Oct 1, 2025


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Win McNamee/Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒப்புதலுடன் காஸாவில் அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

திங்கட்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் காஸாவில் அமைதிக்கான ஒரு திட்டத்தை முன்வைத்தார்.

20 அம்சங்களை கொண்ட இந்தச் சமாதானத் திட்டத்தின் கீழ், காஸாவில் சண்டை நிறுத்தப்படும், இஸ்ரேலியப் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், மேலும் காஸாவின் நிர்வாகத்திற்காக ஒரு சர்வதேச ‘அமைதி வாரியம்’ (Board of Peace) அமைக்கப்படும். இதில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரும் இடம் பெறுவார்.

அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த அமைதித் திட்டத்தை அறிவித்து, இது ஒரு வரலாற்று நடவடிக்கை என்று வர்ணித்தார்.

அப்போது பிரதமர் நெதன்யாகு, இந்தத் திட்டத்தை ஆதரிப்பதாகவும், இது இஸ்ரேலின் போர்க் குறிக்கோள்களை நிறைவேற்றும் என்றும் கூறினார்.

By admin