• Wed. Jun 25th, 2025

24×7 Live News

Apdin News

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் விமானதளம் எந்தளவு முக்கியமானது? அதனை இரான் குறிவைத்தது ஏன்?

Byadmin

Jun 25, 2025


காணொளிக் குறிப்பு, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் விமானதளம் எந்தளவு முக்கியமானது? அதனை இரான் குறிவைத்தது ஏன்?

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் விமான தளம் எந்தளவு முக்கியமானது? அதனை இரான் குறிவைத்தது ஏன்?

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. தங்கள் நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கான பதிலடிதான் இது என, இரான் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக கூறியுள்ள டிரம்ப், இதனை மீற வேண்டாம் என இருநாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இரானும் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமான தளத்தின் மீது இரான் நடத்தியிருக்கும் தாக்குதல் பேசு பொருளாகியுள்ளது.

அல் உடெய்ட் (Al Udeid) விமான தளம் எந்தளவு முக்கியமானது? இதனை இரான் இலக்கு வைத்தது ஏன்? முழு விவரம் காணொளியில்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin