• Sat. Dec 21st, 2024

24×7 Live News

Apdin News

கந்தஹார் விமான கடத்தல் – அந்த 8 நாட்கள் இந்திய நேபாள உறவுகளை மாற்றியது எப்படி?

Byadmin

Dec 21, 2024


கூடுதல் பாதுகாப்பு சோதனைகள்

பட மூலாதாரம், Sanjaya Dhakal/BBC

படக்குறிப்பு, காத்மாண்டு விமான நிலைய விதிமுறைகளில், இந்திய விமானங்களில் பயணிப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகின்றன

  • எழுதியவர், சஞ்சயா தகல்
  • பதவி, பிபிசி நியூஸ் நேபாளி

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்துமஸ் இரவில், காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குச் செல்ல இருந்த ஒரு இந்திய விமானம் கடத்தப்பட்டு, ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் பாதிப்பு இன்று வரை காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் காணப்படுகின்றது. இன்றும், நீங்கள் காத்மாண்டுவிலிருந்து இந்திய விமானத்தில் பயணிக்கும்போது, ஒரு கூடுதல் பாதுகாப்பு சோதனை நடைபெறுகிறது.

விமான நிலையத்தில் வழக்கமான பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் மற்றும் பாதுகாப்புச் சோதனைகளை முடித்த பிறகு போர்டிங் படிக்கட்டுகளுக்கு அருகில், தரையில் இருந்து சுமார் இரண்டரை அடி உயரத்தில் உள்ள அறையில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தும் ஒரு மேலதிக சோதனைக்கும் பயணிகள் உட்பட வேண்டும்.

ஆனால் இந்தச் சோதனை இப்போது தேவையில்லை என்கிறார் நேபாள அரசின் செய்தித்தொடர்பாளர்,

By admin