• Mon. Apr 28th, 2025

24×7 Live News

Apdin News

கனடாவில் கூட்டத்தின் மீது கார் மோதியதில் பலர் உயிரிழப்பு

Byadmin

Apr 27, 2025


கனடாவில் வான்கூவரில் இடம்பெற்ற விழாவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் பலர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து, கைது செய்யப்பட்ட சாரதி காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

41வது அவென்யூ மற்றும் ஃப்ரேசர் தெரு சந்திப்பிற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு மக்கள் பிலிப்பைன்ஸின் தேசிய வீரரின் நிகழ்வொன்றுக்காக கூடியிருந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில் தெரு முழுவதும் இறந்தவர்களின் உடல்கள் கிடப்பதை காண முடிகிறது.

The post கனடாவில் கூட்டத்தின் மீது கார் மோதியதில் பலர் உயிரிழப்பு appeared first on Vanakkam London.

By admin