• Sun. Jun 29th, 2025

24×7 Live News

Apdin News

கனடாவுடனான வர்த்தக பேச்சை நிறுத்தும் அமெரிக்கா!

Byadmin

Jun 29, 2025


கனடாவுடனான வர்த்தக பேச்சை உடனடியாக நிறுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைக் குறிவைக்கும் கனடாவின் புதிய மின்னிலக்கச் சேவை வரி அதற்குக் காரணம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நாளை (30) முதல் 3 சதவீத வரியை கனடா விதிக்கியது. இது Amazon, Google, Meta, Uber மற்றும் AirBnB போன்ற பெரிய நிறுவனங்களை அது பாதிக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

அதனால் இந்நிறுவனங்கள் ஆண்டுக்கு 2 பில்லியன் டொலர் வரை செலவழிக்க நேரிடலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

கனடாவின் வரி, அமெரிக்காவைக் குறிவைத்து தாக்குவதைப் போல் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எனவே, கனடாவின் பொருள்கள் மீது அடுத்த வாரம் கூடுதல் வரி விதிக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

கனடா, அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளித்துவ நாடாக உள்ளது. கடந்த ஆண்டு அது 350 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்தது. சுமார் 412 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது.

By admin