கனடா தேர்தல் 2025: இந்திய வம்சாவளியினரின் எதிர்பார்ப்பு என்ன?
கனடாவில் ஏப்ரல் 28 அன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் வேட்பாளர்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து போட்டியிடுகின்றனர்.
இந்தியாவில் இருந்து கனடாவுக்குச் சென்று தங்களுக்கான எதிர்காலத்தை அமைத்துக் கொண்ட இந்திய வம்சாவளியினர் கனட அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன? குடியேற்ற விதிகள், சட்டங்கள், இனவெறி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி குறித்து கூறுவது என்ன?