• Fri. Mar 21st, 2025

24×7 Live News

Apdin News

கனடா பிரஜைகள் நால்வருக்கு சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றம்!

Byadmin

Mar 20, 2025


போதைப்பொருள் வழக்கில் சீனாவில் கைதான கனடா பிரஜைகள் நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களது தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.

குறித்த நால்வர் பற்றிய தகவல்கள், அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிடப்படவில்லை. ஆனால், அவர்கள் நால்வரும் சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த வழக்கை தாம் கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்து வந்ததாகவும், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிடோரிடம் அந்த நால்வரையும் அவர்களது தண்டனையிலிருந்து காப்பாற்ற முயற்சித்ததாகவும் கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.

அத்துடன், இந்த தண்டனையானது அடிப்படை மனித கண்ணியத்துக்கு முரணானது என்று தனது கண்டனங்களையும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய கனடாவின் சீன தூதரக பிரதிநிதி, தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நால்வரின் குற்றங்களுக்கும் தகுந்த ஆதாரங்கள் உள்ளது என்றும் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளை கூறாமல் சீனாவின் சட்டத்தை மதிக்குமாறு கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல், ஊழல் மற்றும் உளவு போன்ற குற்றங்களில் கைதுசெய்யப்படுவோருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By admin