0
கனடாவில் TikTok நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும், மக்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவது அவர்களது தனிப்பட்ட முடிவு என்றும் அதனால் கனடா பிரஜைகள் TikTok செயலியைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் கனடா கூறியுள்ளது.
TikTokஇன் உரிமையாளரான ByteDance நிறுவனத்தின் செயல்பாடுகள் காரணமாகக் கனடாவில் எழுந்திருக்கும் தேசியப் பாதுகாப்பு ஆபத்துகளைச் சமாளிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கனடா அரசாங்கம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு அரசாங்கச் சாதனங்களிலிருந்து கனடா TikTok செயலியைத் தடை செய்தது. கனடாவின் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய வெளிநாட்டு முதலீடுகளைப் பரிசீலிக்கும் சட்டப்படி அந்த முடிவு எடுக்கப்பட்டதாக கனடா கூறப்படுகிறது.