0
கனடாவில் வான்கூவரில் இடம்பெற்ற விழாவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் பலர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
கனடாவின் இடம்பெற்றுள்ள இந்த துயர சம்பவம் தொடர்பில் தாம் வருந்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வான்கூவரில் நிகழ்ந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அறிந்த நானும் எனது மனைவியும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.
“இத்தகைய ஒரு துயர சம்பவத்தால் உயிரிழந்த அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான பிரார்த்தனைகள் உரித்தாகட்டும்.
தொடர்புடைய செய்தி : கனடாவில் கூட்டத்தின் மீது கார் மோதியதில் பலர் உயிரிழப்பு
“இந்தச் சம்பவம் கனடாவில் பலருக்கும் மிகவும் வேதனையை உருவாக்கியுள்ள நேரத்தில், எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று மன்னர் சார்லஸ் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 5 வயது குழந்தை உட்பட 09 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
காரை ஓட்டி வந்த 30 வயது நபர், கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.