• Mon. Nov 25th, 2024

24×7 Live News

Apdin News

கனடா: 1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்து தீர்மானம் நிறைவேற்ற திட்டம் – இதன் விளைவுகள் என்ன?

Byadmin

Nov 25, 2024


கனடா - இந்தியா, 1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் (கோப்புப்படம்)

கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சி (NDP) வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த நிகழ்வை ஓர் “இனப்படுகொலை” என அங்கீகரிப்பதற்காக ஒரு தீர்மானத்தைத் தங்கள் கட்சி அறிமுகப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ராஜ்ஜீய உறவுகளில் கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில் புதிய ஜனநாயகக் கட்சி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அக்கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட ஓர் அறிக்கையில், “கனடா மண்ணில் சீக்கியர்களுக்கு எதிராக இந்திய அரசின் வன்முறைப் பிரசாரங்கள், 1984ஆம் ஆண்டு சீக்கிய இனப்படுகொலையின்போது கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளன,” என்று தெரிவித்திருந்தார்.

By admin