0
கன்னட திரையுலகின் பிரபல நடிகரான சித்து மூலிமணி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘கோல்ட் கால் ‘என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் தம்பித்துரை இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோல்ட் கால்’ எனும் திரைப்படத்தில் சித்து மூலிமணி, பாயல் செங்கப்பா, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், பாலாஜி ராஜசேகர், கிருஷ்ணா விஜய சந்திரன், நிஷா ஹெக்டே, ராஷ்மிகா சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் ஜி. என். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார்.
அடல்ட் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை வாக்த்ரோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கேசவ மூர்த்தி தயாரித்திருக்கிறார்.
பெங்களூரூ போன்ற மாநகரங்களில் பணியாற்றும் விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வியலை நகைச்சுவையுடன் விவரிக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் கவர்ந்திருக்கிறது.