• Mon. Jan 13th, 2025

24×7 Live News

Apdin News

கப் வாகனம் மோதி பொலிஸ் அதிகாரி பலி!

Byadmin

Jan 12, 2025


அம்பாந்தோட்டை, ரன்னவிலில் உள்ள படாத்த பண்ணைக்கு அருகில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார் என்று ஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 54 வயதான அன்ட்ரஹென்னடிகே மஞ்சுள பிரியநாத் என்ற பொலிஸ் அதிகாரியே உயிரிழந்தார். இவர் அம்பாந்தோட்டை, நோனகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

மேற்படி பொலிஸ் அதிகாரி தனது மோட்டார் சைக்கிளில் ரன்னவிலில் இருந்து ஹங்கம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஹங்கமவில் இருந்து ரன்னவில நோக்கி வந்த ஒரு கப் ரக வாகனம் மோதியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கப் வாகனத்தின் சாரதி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் மீது மோதினார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் உடல் ரன்னவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் ஹங்கம போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin