• Wed. Nov 6th, 2024

24×7 Live News

Apdin News

கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு ஒட்டுமொத்த உலகையும் எவ்வாறு மாற்றும்?

Byadmin

Nov 4, 2024


அமெரிக்க அதிபர் தேர்தல், கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்
படக்குறிப்பு, அமெரிக்க தேர்தல் முடிவுகளை உலகமே உற்றுநோக்குகின்றது

யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கீயவ் நகருக்கு சென்றபோது, வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைக்கான சைரன் ஒலித்தது. “இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவாக ஒன்றை உணர்ந்தேன்,” என அவர் பின்னர் நினைவுகூர்ந்தார். “அமெரிக்கா உலகிற்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது” என்று அவர் கூறிக்கொண்டார்.

கலங்கரை விளக்கம் என தனக்குத் தானே கூறிக்கொள்ளும் அந்நாட்டில் அதிபர் தேர்தலில் வாக்களிக்க அமெரிக்கர்கள் தயாராகி வருகின்றனர். அந்நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு யார் வரவுள்ளார் என்பதை உலகமே காண காத்துக்கொண்டிருக்கிறது. “இந்த நிச்சயமற்ற காலக்கட்டத்தில், அமெரிக்கா பின்வாங்காது என்பதில் தெளிவாக இருக்கிறது,” என்று பைடனின் நிலைப்பாட்டை உறுதியாக பின்பற்றும் கமலா ஹாரிஸ் அதிபர் ஆவாரா? அல்லது “உலகமயம் அல்ல, அமெரிக்கவாதத்திற்கே முன்னுரிமை” (“Americanism, not globalism”) எனும் தன் நம்பிக்கையுடன் டொனால்ட் டிரம்ப் வெல்வாரா?

சர்வதேச அளவிலான செல்வாக்கில் அமெரிக்காவின் மதிப்பு கேள்விக்குறியாகியுள்ள சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பிரதேச அளவில் அதிகாரம் செலுத்தும் சக்திகள், தத்தமது வழியில் சென்றுகொண்டிருக்கின்றன. எதேச்சதிகார ஆட்சிகள் தங்களுடைய சொந்த கூட்டணிகளை உருவாக்குகின்றன. காஸா, யுக்ரேன் மற்றும் மற்ற பகுதிகளில் நடக்கும் பேரழிவுகரமான போர்கள், அமெரிக்காவின் பங்கு குறித்து அந்நாட்டிற்கு தர்மசங்கடமான கேள்விகளை எழுப்புகின்றன. ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் ராணுவ பலம் மட்டுமல்லாமல், பல்வேறு சர்வதேச கூட்டணிகளில் வகிக்கும் குறிப்பிடத்தகுந்த பங்கும் அந்நாட்டை முக்கியமானதாக ஆக்குகிறது. இந்த தேர்தலால் உலகளவில் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றி, அதுகுறித்து அறிந்த நோக்கர்களிடம் நான் கருத்துகளை பெற்றேன்.

அமெரிக்க அதிபர் தேர்தல், கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ராணுவ பலம்

அமெரிக்க அதிபர் தேர்தல், கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்
படக்குறிப்பு, கான் யூனிஸில் அழிக்கப்பட்ட தன் வீட்டின் இடிபாடுகளுக்கு மத்தியில் நெருப்புக்கு அருகே அமர்ந்திருக்கும் பாலத்தீனர்கள்

“இந்த எச்சரிக்கைகளை என்னால் குறைத்து மதிப்பிட முடியாது,” என்கிறார், நேட்டோ அமைப்பின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் ரோஸ் கோட்டேமோயெல்லர். “நேட்டோவிலிருந்து வெளியேறிவிடுவோம் என்ற டிரம்பின் அச்சுறுத்தல் அனைவருடைய காதுகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது, ஐரோப்பாவின் கொடுங்கனவாக அவர் இருக்கிறார்.” என்று அவர் கூறுகிறார்.

By admin