• Thu. Aug 21st, 2025

24×7 Live News

Apdin News

கமுதி கோட்டை: கட்டபொம்மன், மருது சகோதரர்கள் தங்கிய கோட்டையின் வியக்க வைக்கும் வரலாறு

Byadmin

Aug 19, 2025


கமுதி கோட்டை, ராமநாதபுரம் கோட்டை, தமிழக கோட்டைகள், கோட்டை வரலாறு
படக்குறிப்பு, கட்டப்பட்டு சுமார் 300 ஆண்டுகளைக் கடந்திருக்கும் இந்தக் கோட்டை பல சுவாரஸ்யமான கதைகளைக் கொண்டது.

பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கட்டப்பட்ட வட்ட வடிவிலான கோட்டை, இன்னமும் ஆச்சரியமளிக்கிறது. இந்தக் கோட்டையின் வியக்க வைக்கும் வரலாறு என்ன?

ராமநாதபுரத்தில் கமுதியிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது வட்ட வடிவமான இந்தக் கோட்டை. கோட்டையின் பெரும் பகுதிகள் சிதைந்துவிட்டாலும் கோட்டையின் கம்பீரம் இன்னமும் குறையவில்லை. கட்டப்பட்டு சுமார் 300 ஆண்டுகளைக் கடந்திருக்கும் இந்தக் கோட்டை பல சுவாரஸ்யமான கதைகளைக் கொண்டது.

ராமநாதபுரம் நாட்டை அட்சிசெய்த மன்னர்களில் கிழவன் சேதுபதிக்கு (1678 – 1710) அடுத்ததாக குறிப்பிடத்தக்க மன்னர்களில் ஒருவராக இருந்தவர் முத்து விஜய ரகுநாத சேதுபதி (1713-1725). ராமநாதபுரம் நாட்டின் நிர்வாகத்தை சீர்செய்ததுடன், அதன் ராணுவப் பாதுகாப்பையும் இவரே வலுப்படுத்தியதாக தனது ‘சேதுபதி மன்னர் வரலாறு’ நூலில் குறிப்பிடுகிறார் எஸ்.எம். கமால்.

கமுதி கோட்டை, ராமநாதபுரம் கோட்டை, தமிழக கோட்டைகள், கோட்டை வரலாறு
படக்குறிப்பு, வட்ட வடிவிலான கோட்டை, இன்னமும் ஆச்சரியமளிக்கிறது

இவருடைய காலகட்டத்தில்தான் ராமநாதபுரம் அரண்மனையின் அத்தாணி மண்டபமான ராமலிங்க விலாசத்தின் சுவர்கள் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன. இந்த மண்டபத்தின் ஒரு இடம்கூட விடாமல் ஓவியங்கள் தீட்டப்பட்டன. அந்த காலகட்டத்தின் வாழ்வைப் புரிந்துகொள்ள இந்த ஓவியங்கள் இப்போதும் உதவுகின்றன. இவருடைய காலகட்டத்தில்தான் ராமேஸ்வரம் கோவிலின் புகழ்பெற்ற மூன்றாவது பிரகாரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

By admin