• Tue. Oct 7th, 2025

24×7 Live News

Apdin News

கம்மன்பில, விமல் விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும் | மஹிந்த ஜயசிங்க

Byadmin

Oct 7, 2025


உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும். இனவாதத்தை முன்னிலைப்படுத்தியே இவர்கள் செயற்படுகிறார்களென தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலின் போது தேர்தலில் போட்டியிடாமலே தோல்வியை அறிந்து விலகிக் கொண்டவர்கள் இன்று தேசப்பற்றாளர்கள் போல் பேசுகிறார்கள்.இந்த நாடு இனவாதத்தால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.அதற்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் இன்றும் கடந்த அரசாங்கம் தான் ஆட்சியி;ல் உள்ளது என்று நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள். போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும்.

இனவாதத்தை முன்னிலைப்படுத்தி இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்ற இவர்கள் முயற்சிக்கிறார்கள்.நாட்டு மக்கள் இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். மக்கள் மத்தியில் தவறான விடயத்தை சமூகமயப்படுத்த இடமளிக்க முடியாது என்றார்.

By admin