• Mon. Sep 15th, 2025

24×7 Live News

Apdin News

கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்: விஜய்க்கு பெ.சண்முகம் அறிவுறுத்தல் | Shanmugam advises vijay to read the biographies of communist leaders

Byadmin

Sep 15, 2025


சென்னை: கம்​யூனிஸ்ட் தலை​வர்​களின் வாழ்கை வரலாற்றை படி​யுங்​கள் என தவெக தலை​வர் விஜய்க்​கு, மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வு: தவெக தலை​வர் விஜய் தனது பரப்​புரை​யில், ‘அரசி​யலுக்கு வந்து தான் பணம் சம்​பா​திக்க வேண்​டும் என்ற அவசி​யம் இல்​லை’ என்று கூறியதை ஏதோ அவர் தியாகம் செய்​வதை போல பெரிது படுத்தியுள்​ளனர். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மகத்​தான தலை​வர்​கள் பதவியை பயன்​படுத்தி பணம் சம்​பா​தித்​தார்​கள் என்று எதிரி​களால் கூட குற்​றம் சாட்ட முடி​யாது.

அது மட்​டுமல்​லாமல் இ.எம்​.எஸ், பி.சுந்​தரய்​யா, ஹர்​கிஷன்​சிங் சுர்​ஜித் ஆகியோர் கட்​சி​யின் அகில இந்​திய பொதுச் செய​லா​ள​ராக சிறப்​பாக செயல்​பட்​ட​வர்​கள். தலைவர்கள் மட்டுமல்ல அடிப்படை உறுப்பினர்கள் கூட தங்​களது சொத்​து​களை கட்​சிக்கு வழங்கியவர்​கள்.

அந்​தவகை​யில் உடல், பொருள், ஆவி அனைத்​தை​யும் தியாகம் செய்​வது தான் கம்​யூனிஸ்ட்​களின் அரசி​யல். வரலாற்றை படியுங்கள் மிஸ்​டர் விஜய். அதி​லும் மக்​கள் நலனுக்​காக தியாகம் செய்​வது என்​றால் என்ன என்​பதை அறிய கம்​யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாறை படி​யுங்​கள்.



By admin