• Tue. Apr 7th, 2026

24×7 Live News

Apdin News

கரீம்நகர்: தனது இரட்டை பெண் குழந்தைகள் மீது வெறுப்புற்ற தந்தை என்ன செய்தார்?

Byadmin

Apr 7, 2026


கரீம்நகர் காவல் ஆணையர் கௌஸ் ஆலம்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, இரட்டைக் குழந்தைகளின் கொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கரீம்நகர் காவல் ஆணையர் கௌஸ் ஆலம் தெரிவித்தார்.

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் சங்கடம் தரலாம்)

தெலங்கானாவில் தனது சொத்துகள் அனைத்தும் தனது இரண்டு மகள்களின் திருமணச் செலவுகள் மற்றும் வரதட்சணைக்கே சென்றுவிடும் என்று எண்ணி ஐந்து வயதிற்குட்பட்ட தனது இரட்டைப் பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொலை செய்த தந்தை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினர் மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என கரீம்நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

“அனைத்து சொத்துகளும் பெண்களுக்கே சென்றால், அவ்வளவு பெரிய சொத்தை (சுமார் 2 கோடி ரூபாய்) மீண்டும் சம்பாதிப்பது கடினம்” என்ற அடிப்படையில் இந்த இரட்டைக் கொலை திட்டமிடப்பட்டதாகக் கரீம்நகர் போலீஸ் கமிஷனர் கௌஸ் ஆலம் கூறியுள்ளார்.

என்ன நடந்தது?

திங்கள்கிழமை (ஏப்ரல் 6) கரீம்நகர் காவல் ஆணையரகத்தில் காவல்துறையினர் வழங்கிய விவரங்களின்படி இங்கே தகவல்கள் தரப்பட்டுள்ளன.

கரீம்நகர் கிராமப்புற மண்டலத்தைச் சேர்ந்த ஜூப்ளி நகரில் வசிக்கும் கச்சு ஸ்ரீசைலம், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் கணினி ஆபரேட்டராகப் பணிபுரிந்தார். இவருக்கும் மானகொண்டூர் மண்டலம் லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த சுக்கா மௌனிகாவிற்கும் 2020-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

By admin